'மாமனிதன்' படத்தைத் தொடர்ந்து சீனு ராமசாமி தற்போது இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷை வைத்து 'இடிமுழக்கம்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.
நாயகியாக காயத்ரி நடித்துள்ள இப்படத்தில் எம்.எஸ். பாஸ்கர், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். த்ரில்லர் பாணியில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு தேனி, கொடைக்கானல், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றது.
இந்நிலையில், 'இடிமுழக்கம்' படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளதாக சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வறட்சியில் சிக்கிய தென் மாவட்டங்களைப் பசுமையாய் மாற்றிய மாமனிதர் ஜான் பென்னிகுவிக் மணிமண்டபத்தில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் தலைமையில் மரியாதை செய்து இடிமுழக்கம் படப்பிடிப்பு நிறைவுற்றது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:பிரபு சாலமன் படத்தில் அஸ்வின்!