கூகுள் மேப்பில் திசையின் பெயர்களை தாய் மொழியில் சொன்னால் நன்றாக இருக்கும் என சீனு ராமசாமி சுந்தர் பிச்சையிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
'தென்மேற்குப் பருவக்காற்று', 'நீர்ப்பறவை', 'தர்மதுரை' உள்ளிட்ட தனித்துவமான தமிழ்ப் படங்களைத் தந்தவர் சீனு ராமசாமி. இவர் தற்போது விஜய் சேதுபதியை வைத்து 'மாமனிதன்' படத்தை இயக்கி வருகிறார். இதில் 'தென்மேற்குப் பருவக்காற்று' சிறந்த படத்திற்கான தேசிய விருதை வென்றது.
அவ்வப்போது தனது கருத்துகளை சமூகவலைதளத்தின் மூலம் பகிர்ந்தும் வரும் இயக்குநர் சீனு ராமசாமி, தற்போது கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதாவது, 'கூகுள் வழிகாட்டி (Google maps) தாய்மொழியில் திசையின் பெயர்களைச் சொன்னால் சுகமாய் இருக்கும். இதைச் செய்ய முடிந்தால் பெருமையெல்லாம் உம்மைச்சேரும்' என சுந்தர் பிச்சைக்கு டேக் செய்துள்ளார்.
சுந்தர் பிச்சை தமிழர் என்பதால் சீனு ராமசாமி, தனது கோரிக்கையை தமிழிலேயே வைத்துள்ளார். இவரின் இந்த கோரிக்கைகளுக்கு சுந்தர் பிச்சை நடவடிக்கை எடுப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதையும் வாசிங்க:'இத்தனை ஆண்டுகள் ஆகியும் நீ மாறலா...அப்படியே இருக்க' - 'மாமனிதன்' சீனு ராமசாமி