இந்திய கிரிக்கெட் வீரர் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை நேற்று (ஆகஸ்ட் 15) அறிவித்தார். உலகளவில் பல ரசிகர்களைக் கொண்ட தோனிக்கு, தமிழ் சினிமா நடிகர்களும் ரசிகர்களாய் இருக்கின்றனர்.
தோனி தனது ஓய்வை அறிவித்ததிலிருந்தே பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நடிகர் சிவகார்த்திகேயன் மக்களை மகிழ்வித்ததற்காகவும், பலருக்கும் முன்மாதிரியாய் இருப்பவர் தோனி என தனது வாழ்த்தினைப் பதிவு செய்தார்.
இதைத்தொடர்ந்து தேசிய விருது பெற்ற இயக்குநரான சீனு ராமசாமி சிவகார்த்திகேயனுக்கு தனது வாழ்த்தைப் பதிவு செய்தார். மேலும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை தோனியுடன் ஒப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்ட சீனு ராமசாமி, "சின்னத்திரையில் முதன்முதலில் அறிமுகமாகி, தற்போது வெள்ளித்திரையில் ஸ்டாராகி இருக்கிறார், சிவகார்த்திகேயன். முன்னுதாரணமாக இருந்து, மக்களை மகிழ்வித்து, பல புதியவர்களுக்கும் நண்பர்களுக்கும் உங்களுடைய துறையிலேயே வாய்ப்பளித்துள்ளீர்கள். நீங்கள் இருவரும் வேரில் இருந்து மலர்ந்துள்ளீர்கள்".
இதையும் படிங்க...சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு!