சென்னை: கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 22.74 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தொற்று பொதுமுடக்க தளர்வுகளைத் தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் கடந்த ஜூன் 21ஆம் தேதி முதல் 50% இருக்கை வசதிகளுடன் மீண்டும் தொடங்கியது. 21.06.2021 முதல் 31.08.2021வரை மொத்தம் 44.76.111 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளதாகவும், 21.06.2021 முதல் 30.06.2021வரை 3.55,579 பேர் பயணம் செய்துள்ளதாகவும், 01.07.2021 முதல் 31.07,2021 வரை 18,46,466 நபர்கள் பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
01.08.2021 முதல் 31.08.2021வரை மொத்தம் 22,74,066 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
அதிகபட்சமாக கடந்த 27ஆம் தேதி 88,579 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 35,180 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர், மேலும் பயண அட்டை பயணச்சீட்டு (Travel Cand Ticketing System) முறையைப் பயன்படுத்தி 12,19,967 பயணிகள் பயணம் செய்துள்ளனர் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.