தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

‘குழந்தைகள் என் நடிப்புப் பணியை எளிதாக்கினர்’ - ஜோஜோ ரேபிட் குறித்து பெருமிதம் தெரிவிக்கும் ஸ்கார்லெட் ஜோஹன்சன் - hollywood news

குழந்தைகள் ஆத்மார்த்தமானவர்கள், சுட்டித்தனத்துடன், பிறருக்கு மதிப்பளிக்கக்கூடியவர்களாகவும் இருப்பதால் அவர்களுடன் பணிபுரிந்தது என் வேலையை மிகவும் எளிமையாக்கியது ஜோஜோ ரேபிட் திரைப்படத்தில் பணியாற்றியது குறித்து பிரபல ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன் தெரிவித்துள்ளார்.

ஸ்கார்லெட் ஜோஹன்சன்
ஸ்கார்லெட் ஜோஹன்சன்

By

Published : Feb 7, 2020, 5:37 PM IST

ஹாலிவுட்டின் கனவுக்கன்னி, அனைவராலும் நேசிக்கப்படும் மார்வெல் புகழ் நடாஷா என உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர் நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன். இந்த வருடம் ஜோஹன்சன் நடித்தத் திரைப்படங்களான மேரேஜ் ஸ்டோரி, ஜோஜோ ரேபிட் ஆகிய இரண்டு திரைப்படங்கள் ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இதில் ஜோஜோ ரேபிட் திரைப்படத்தில் கதையின் முக்கியக் கதாபாத்திரமான ஜோஜோ எனும் குழந்தையின் அம்மாவாகத் தோன்றியும், குழந்தைகளுடன் இணைந்தும் நடித்திருந்தார்.

சமீபத்தில் இந்தத் திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து பகிர்ந்த அவர், ”நான் இத்திரைப்படத்தில் இரண்டு சிறந்த நடிகர்களுடன் பணியாற்றியுள்ளேன். இவர்கள் அனுபவமற்றவர்களாக இருக்கலாம். ஆனால் வெளிப்படைத்தன்மையுடனும், பரிசுத்தமானவர்களாகவும் இருக்கிறார்கள். இந்த குழந்தைகள் சுட்டித்தனத்துடனும் அதே நேரம் பிறருக்கு மதிப்பளிக்கக்கூடியவர்களாகவும், ஆத்மார்த்தமானவர்களும் இருக்கிறார்கள், இது எனது பணியை மேலும் எளிமையாக்கியது” என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து பேசிய அவர், ”தன் வாழ்வில் திடீரென மோசமான சுழ்நிலை ஒன்றில் சிக்கித்தவிக்கும் ஒரு நடுத்தர வயதைச் சேர்ந்த கலகலப்பான பெண்ணி கட்தாபாத்திரத்தைப் பற்றிய கதை. பார்வையாளர்கள் இதனை புதுமையான கதாப்பாத்திமாகவே உணர்வார்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.

ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள தன் இரண்டு திரைப்படங்களைப் பற்றிப் பேசுகையில், மேரேஜ் ஸ்டோரி இயக்குநர் நோவா பௌம்பச் மற்றும் ஜோஜோ ரேபிட் இயக்குநர் டைகா வைடிடி ஆகியோருடன் பணியாற்றியது ஒரு திரைப்படக்கலைஞராக எனக்கு பெரும் மனநிறைவை அளித்துள்ளது. அகாதமி விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இதற்கு உறுதுணையாக இருந்து இதனை சாத்தியமாக்கிய உடன் பணியாற்றிய அனைத்துக் கலைஞர்களுக்கும் நன்றி” எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வெப் சீரிஸில் இணையும் பிரியங்கா - நிக் ஜோனஸ் தம்பதி

ABOUT THE AUTHOR

...view details