கரோனா தொற்று காரணமாக அமலில் இருக்கும் இந்த ஊரடங்கு காலத்தில் திரை பிரபலங்கள் பலர் தங்களது சமூகவலைதள பக்கத்தில் பல்வேறு விதமான, வேடிக்கையான, நகைச்சுவையான புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தீபிகாவை போன்று நகல் எடுத்த சாயிஷா - நடன வீடியோ வைரல் - பாஜிராவ் மஸ்தானி
தீபிகா படுகோனேவின் படத்தின் பாடலுக்கு நடிகை சாயிஷா ஆடி இருக்கும் நடன வீடியோ சமூகவலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
![தீபிகாவை போன்று நகல் எடுத்த சாயிஷா - நடன வீடியோ வைரல் Sayyeshaa](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7220906-458-7220906-1589616793317.jpg)
Sayyeshaa
அந்த வகையில் சாயிஷா சமீபத்தில் நடன வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். தற்போது சாயிஷா, தீபிகா படுகோனே நடிப்பில் வெளியான 'பாஜிராவ் மஸ்தானி (Bajirao Mastani)' படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்றுக்கு நடனமாடியுள்ளார். ஒரு நிமிடம் இருக்கும் இந்த வீடியோ வீட்டில் இருந்தபடியே ஒரே ஷாட்டில் உருவாக்கியுள்ளார். பாடலில் தீபிகா படுகோனேவின் டான்ஸ் மூவ்மெண்ட்களை சயிஷாவும் அப்படியே ஆடியுள்ளார்.