தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 17, 2020, 4:47 PM IST

ETV Bharat / sitara

இவருக்கு இப்படி ஒரு ஆசையா...வீடியோ வெளியிட்ட சாயிஷா!

நடிகை சாயிஷா, ஜெனிஃபர் லோபஸ் பாடிய பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூகவலைத்தளத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

Sayyeshaa
Sayyeshaa

கரோனா அச்சம் காரணமாக அனைத்து வித படப்பிடிப்புகளும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் திரைப்பிரபலங்கள் வீட்டில் இருந்துக்கொண்டே தங்களது சமூகவலைத்தளப்பக்கம் மூலமாக ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகின்றனர்.

தமிழில் 'வனமகன்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சாயிஷா. சாயிஷா திரைப்பாடல்களில் தனது வித்தியாசமான நடன அசைவினால் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

இதனையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் நடனவீடியோ ஒன்றை சாயிஷா தற்போது பதிவிட்டுள்ளார். பிரபல பாடகியும் டான்சருமான ஜெனிஃபர் லோபஸ் ஆல்பத்தில் இருந்து அவரைப் போலவே நடனமாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையவாசிகளால் அதிகம் விரும்பி பகிரப்பட்டுவருகிறது.

மேலும் இந்த வீடியோ குறித்து சாயிஷா குறிப்பிட்டிருப்பதாவது: ஜெனிஃபர் லோபஸின் இசை நிகழ்ச்சியை ஒரு முறையாவது நேரில் பார்க்கவேண்டும் என்பது எனது ஆசை. இருப்பினும் இந்த நேரத்தில் அவரது பாடலுக்கு நடனமாடுவது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details