தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஸ்பைடர் மேனை காப்பாற்றக் கோரி கண்ணீர்விடும் நெட்டின்சன்கள்! - Disney - Sony

டிஸ்னி - சோனி  ஆகிய இரு நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததால், ஸ்பைடர் மேன் கதாபாத்திரம் இனி மார்வெல் படங்களில் இடம்பெறாது என வெளியான தகவலையடுத்து சேவ் ஸ்பைடர் மேன் (#savespiderman) ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

save spider man

By

Published : Aug 21, 2019, 1:34 PM IST

Updated : Aug 21, 2019, 1:52 PM IST

உலகமெங்கும் ரசிகர்களை கவர்ந்த ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தை மார்வெல் நிறுவனம் உருவாக்கியிருந்தாலும், அந்த காதாபாத்திரத்தை வைத்து படம் எடுக்கும் உரிமையை சோனி நிறுவனம் தனதாக்கி வைத்துள்ளது. இந்நிலையில் ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தை மார்வெல் படங்களுடன் இணைப்பதற்காக 2015ஆம் ஆண்டு சோனி நிறுவனத்துடன் டிஸ்னி நிறுவனம் சார்பாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தில் ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தை வைத்து உருவாக்கப்படும் மூன்று படங்களை இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து தயாரிப்பதாகவும், வரும் வசூலை பிரித்துகொள்வது எனவும் ஒப்பந்தங்கள் போடப்பட்டது.

உலக அளவில் ட்ரெண்டாகி வரும் #savespiderman

இதன் அடிப்படையில் மார்வெல் திரைப்படங்களான அவெஞ்சர்ஸ் சீரியஸில் ஸ்பைடர் மேன் கதாபாத்திரம் இடம்பெற்றது. அதனையடுத்து ஸ்பைடர் மேன் அவே ஃப்ரம் தி ஹோம் (spider man: away from the home) திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படங்கள் உலகம் முழுவதும் மிகப்பெரும் வசூலை அள்ளியது.

இந்நிலையில் டிஸ்னி நிறுவனம் சோனி நிறுவனத்துடன் செய்த ஒப்பந்தம் முடிவடைந்துள்ளது. இதனால் மார்வெல் நிறுவனத்தின் படங்களில் இனி ஸ்பைடர் மேன் கதாபாத்திரம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் வெளியான சில மணி நேரங்களிலேயே உலகமெங்கும் உள்ள மார்வெல் ரசிகர்கள் #saveSpiderman எனும் ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யத் தொடங்கியுள்ளனர்.

Last Updated : Aug 21, 2019, 1:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details