நகைச்சுவை நடிகர் சதீஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படத்தை கிஷோர் இயக்கிவருகிறார். ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் இப்படத்தில், 'குக் வித் கோமாளி' மூலம் பிரபலமான பவித்ரா நாயகியாக நடிக்கிறார்.
வடிவேலு vs சதிஷ்- யாருக்கு நாய் சேகர் தலைப்பு - வடிவேலு
’நாய் சேகர்’ என தலைப்பில் வடிவேலு நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது சதிஷின் திரைப்படத்திற்கும் அதே தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
'நாய் சேகர்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், "வடிவேலு சாரின் ரசிகனாக இந்த முதல் பார்வையை வெளியிடுவதில் மகிழ்ச்சி. சதிஷ் உங்கள் பொறுப்பு அதிகமாகிவிட்டது சிறப்பாகச் செய்யுங்கள், படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் திரையுலகில் ரீ-என்டரி கொடுக்கும் வடிவேலுவின் படத்திற்கும், 'நாய் சேகர்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக பேட்டி மூலம் தெரியவந்தது. ஏற்கனவே ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் 'நாய் சேகர்' தலைப்பை முறைப்படி சங்கத்தில் பதிவு செய்துவிட்டதால், வடிவேலுவின் பட தலைப்பு மாற்றப்படும் என கூறப்படுகிறது.