அனிஸ் இயக்கத்தில் சசிகுமார், வாணி போஜன், பிந்துமாதவி உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் பகைவனுக்கு அருள்வாய்.
இப்படத்தை 4 மங்கீஸ் ஸ்டூடியோ தயாரித்துவருகிறது. இதற்கு கார்த்திக் தில்லை ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுவந்தது.
சசிகுமாரின் பகைவனுக்கு அருள்வாய் படப்பிடிப்பு நிறைவு! - sasikumars pagaivanuku arulvai movie shoot wrap up
சசிகுமாரின் பகைவனுக்கு அருள்வாய் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
![சசிகுமாரின் பகைவனுக்கு அருள்வாய் படப்பிடிப்பு நிறைவு! pagaivanuku arulvai movie shoot wrap up](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10758574-146-10758574-1614164541315.jpg)
pagaivanuku arulvai movie shoot wrap up
இந்த நிலையில், கர்நாடக மாநிலம் சிமோகாவில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு இன்றுடன் (பிப்.24) நிறைவடைந்துவிட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது. விரைவில் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:அந்த மூன்று பேருக்கு 'பசுமை இந்தியா' சேலஞ்ச் விடுத்த சசிகுமார்...!