நடிகரும் இயக்குநருமான கே. பாக்கியராஜ் இயக்கி, நடித்து வெளியான திரைப்படம் 'முந்தானை முடிச்சு'. 1983ஆம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று ப்ளாக்பஸ்டர் ஹிட்டானது. ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், வெளியான இந்தத் திரைப்படத்தில் நடிகை ஊர்வசி அறிமுகமானார்.
'முந்தானை முடிச்சு'க்கு வந்துடுச்சு ரீமேக் - tamil news
நடிகர் பாக்கியராஜ் இயக்கத்தில் வெளியாகி, மெகா ஹிட் அடித்த 'முந்தானை முடிச்சு' திரைப்படத்தின் ரீமேக் பணிகள் தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
sasikumar to collaborate with K Bhagyaraj for Mundhanai Mudichu remake
இந்தத் திரைப்படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது இப்படத்தை தற்காலத்துக்கு ஏற்ப ரீமேக் செய்யும் பணி தொடங்கியுள்ளது. ஜேஎஸ்பி மூவி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தத் திரைப்படத்தில் நடிகர் சசிகுமாரும், இயக்குநர் பாக்கியராஜும் இணைந்து பணியாற்றவுள்ளனர். விரைவில் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க... 'சிகரெட்டை வைத்து பழத்தை வெட்டுங்க' - டிப்ஸ் கொடுத்த 'துப்பாக்கி' வில்லன்