இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் பெண்கள் கபடியை மையமாக வைத்து சமீபத்தில் வெளியான படம் 'கென்னடி கிளப்'. இப்படத்தில் சசிகுமாரும் இயக்குநர் பாரதிராஜாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து சசிக்குமார் புதிதாக நடிக்கவுள்ள புதிய படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் சசிகுமார் 'பரமகுரு' படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தை நேமிசந்த் ஜபக் தயாரிக்கிறார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்க்கும்போது இப்படம் புலன் விசாரணை கதையம்சம் கொண்டதாக இருக்கும் எனத் தெரிகிறது.