தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பரமன் காவல் அலுவலரா கலக்கப் போறாரு..! - gurusomasundaram

இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் கதையாக உருவாகும் புதிய படத்தில் நடிகர் சசிகுமார் காவல் துறை அலுவலராக நடித்துவருகிறார்.

நடிகர் சசிகுமார்

By

Published : May 31, 2019, 9:36 AM IST

சமீபகாலமாக தோல்வியை சந்தித்துவரும் நடிகர் சசிகுமார் தற்போது இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகும் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 'அஞ்சாதே', 'பாண்டி', 'வன்மம்', 'மாப்பிள்ளை', 'டிக் டிக் டிக்' போன்ற படங்களை தயாரித்த நேமிசந்த் ஜெபக் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

நடிகர் சசிகுமார்

மலையாளத்தில் காலேஜ் டேஸ், காஞ்சி, டியான் ஆகிய படங்களை இயக்கிய என். கிருஷ்ணகுமார் இப்படத்தை இயக்குகிறார். இந்தப்படத்தில் நடிகர் சசிகுமார் உடன் தேசியவிருது பெற்ற ஜோக்கர் புகழ் குருசோமசுந்தரம், மானஷா ராதா கிருஷ்ணன், இளங்கோ குமரவேல், மாரிமுத்து, அப்புக்குட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

நடிகர் குருசோம சுந்தரம்

இப்படத்தில் சசிகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படம் முழுவதும் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் என்பதால் பார்வையாளரை கவரும் விதமாக கதை திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறதாம். ரோனி ராப்பின் இசையில் உருவாகும் இப்படத்திற்கு எஸ்.கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். படத்திற்கு பெயரிடப்படாத நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

ABOUT THE AUTHOR

...view details