நடிகரும் இயக்குநருமான கே. பாக்கியராஜ் இயக்கி நடித்து வெளியான திரைப்படம் 'முந்தானை முடிச்சு'. 1983ஆம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று, ப்ளாக்பஸ்டர் ஹிட்டானது. ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், வெளியான இந்தத் திரைப்படத்தில் நடிகை ஊர்வசி அறிமுகமானார்.
இளையராஜா இசையமைத்த படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. இந்நிலையில், 37 ஆண்டுகளுக்கு பின் முந்தானை முடிச்சு ரீமேக் செய்யப்படுகிறது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனத்தை பாக்யராஜ் எழுதுகிறார். இந்த ரீமேக்கில் பாக்யராஜ் கதாபாத்திரத்தில் சசி குமாரும் ஊர்வசி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷூம் நடிக்கவுள்ளனர். ஆனாலும், படத்தை இயக்கும் இயக்குநர் குறித்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது.