இயக்குநர் சுந்தர்.சியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கதிர்வேலு தற்போது சசிகுமாரை வைத்து இயக்கியுள்ள படம் 'ராஜவம்சம்'. இதில் நிக்கி கல்ராணி, தம்பி ராமையா, சிங்கம் புலி, ரேகா, நிரோஷா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டி.டி. ராஜா தயாரித்துள்ளார். சசிகுமாரின் 19ஆவது படமான இப்படம் மார்ச் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
மார்ச் மாதம் வெளியாகிறது சசிகுமாரின் 'ராஜவம்சம்' - சசிகுமாரின் ராஜவம்சம்
சென்னை: சசிகுமாரின் 'ராஜவம்சம்' திரைப்படம் மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது.
rajavamsam
இது முழுக்க முழுக்க குடும்பத் திரைப்படமாக உருவாகியுள்ளது. சசிகுமார் ரசிகர்கள் இப்படத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: 'அம்பானி ஃபேமிலி இல்ல அன்பான ஃபேமிலி': சசிகுமாரின் 'ராஜவம்சம்' பட டீசர் வெளியீடு!