தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சசிகுமாரின் 'எம்ஜிஆர் மகன்' ரிலீஸ் தள்ளிவைப்பு! - 'எம்ஜிஆர் மகன்' ரிலீஸ் தள்ளிவைப்பு

சென்னை: சசிகுமார் நடித்துள்ள 'எம்ஜிஆர் மகன்' திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Mgr magan
Mgr magan

By

Published : Apr 19, 2021, 1:06 PM IST

'சீமராஜா' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பொன்ராம் இயக்கியுள்ள படம் 'எம்ஜிஆர் மகன்'. இப்படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடித்துள்ளார். சத்யராஜ், மிருணாளினி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் உடன் நடித்துள்ளனர்.

பாடகர் அந்தோணிதாசன் இப்படத்திற்கு இசையமைத்து இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம், ஏப்ரல் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கரோனா இரண்டாவது அலை ஏற்பட்டு தமிழ்நாட்டில் மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் படத்தின் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் படத்தின் வெளியீட்டை தள்ளிவைத்துள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details