'டெடி' படத்தையடுத்து நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சார்பட்டா'. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
குத்துச்சண்டையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் பசுபதி, ஜான் கோகேன், கலையரசன், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் 'சார்பட்டா' திரைப்படம் நேரடியாக அமேசான் ஃபிரைம் ஓடிடி தளத்தில் வெளியிடவுள்ளதாகத் தெரிகிறது. மேலும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், படக்குழு இதனை உறுதி செய்யவில்லை.
கடந்த சில நாள்களாக ஜீ5, சோனி லைவில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளதாக வதந்திகள் பரவி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சத்தமே இல்லாமல் சாதனை படைத்த வலிமை!