நத்தம் நாயகி சார்பட்டா மாரியம்மா - undefined
நத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு சினிமா ஷூட்டிங் நடப்பது வழக்கம்; ஆனால் இப்பகுதியில் இருந்து ஒரு புதிய கதாநாயகி உருவாகியுள்ளது இப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கன்னியாபுரம் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகரின் மகள் துஷாரா விஜயன். வடசென்னையை மையமாக கொண்டு இயக்குநர் பா.ரஞ்சித் படைத்திருக்கும் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் கதாநாயகியாக உருவெடுத்துள்ளார்.
ஆர்யாவின் அசத்தலான நடிப்பில் வடசென்னையை மையமாக வைத்து குத்துச்சண்டை தொடர்பான அற்புதமான படைப்பை தந்திருக்கிறார் இயக்குநர் பா. ரஞ்சித். வெறும் குத்துச்சண்டை படமாக இல்லாமல் அரசியல் களத்திலும் குஸ்தியை ஏற்படுத்தி உள்ளது சார்பட்டா பரம்பரை.
திமுக, காங்கிரஸ், இந்திய குடியரசு கட்சி என வெளிப்படையாக 1975 கால அரசியலைப் பற்றி பேசுகிறது இந்த படம். குறிப்பாக எமர்ஜென்சி கால திமுகவினரை பற்றி அதிகமாகவே பேசி இருக்கிறது சார்பட்டா பரம்பரை.