நடிகரும், அகில இந்தியசமத்துவ மக்கள்கட்சியின் தலைவருமான சரத்குமாருக்கு சமீபத்தில் கரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது மகளும், நடிகையுமான வரலட்சுமி தெரிவித்தார்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த சரத்குமார் குணமடைந்துவிட்டதாக வரலட்சுமி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எனது தந்தை கரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளார்.
அவர் பாதிப்பிலிருந்து மீண்டாலும், அவரது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க சில நாள்கள் தேவை என்று மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி 10 நாள்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்" எனத் தெரிவித்துள்ளார்.
நமது நெருங்கிய ஒருவர் யாராவது கரோனாவால் பாதிக்கப்பட்டால்தான் அதன் தாக்கம் நமக்குப் புரிகிறது என்று கூறியுள்ளார். அதேபோல் வெளிஇடங்களுக்கு செல்லும்போது அனைவரும், முககவசம் அணிந்து தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க:சித்ராவின் முதல் திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு, ரசிகர்கள் வேதனை