'கிழக்கே போகும் ரயில்' படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் ராதிகா. வெள்ளித்திரை, சின்னதிரையில் இவர் அறிமுகமாகி நேற்றுடன் (ஆக.10) 43 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதற்கு ரசிகர்கள், திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில் ராதிகாவின் கணவரும், நடிகருமான சரத்குமார் அவருக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், "என் அன்பு மனைவி மற்றும் சிறந்த நண்பருக்கான பதிவு இது. திரைத்துறையில் 43 ஆண்டுகள் நிறைவு செய்ததற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
நீங்கள் ஒரு சிறந்த நடிகருக்கான அடையாளத்தை மட்டும் உருவாக்கவில்லை, ஒரு பாவமும் செய்யாத தொழில்முனைவோராகவும் முத்திரை பதித்திருக்கிறீர்கள்.