நடிகர் சைஃப் அலிகானின் மகளும், நடிகையுமான சாரா அலி கான் எப்போதும் சமூக வலைதளங்கில் படு ஆக்டிவ்வாக உள்ளார். இந்நிலையில் சாராவின் தம்பி இப்ராஹிம் அலிகான் இன்று தனது 19ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இதையொட்டி சாரா தனது தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் அவர்கள் இருவரும் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றபோது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் சாரா, பிகினி உடையணிந்து கொண்டு தனது தம்பியுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். இதை கண்ட நெட்டிசன்கள், தம்பியாக இருந்தாலும் இது போன்று எப்படி புகைப்படம் எடுக்கலாம்.
அதுவும் பிறந்தநாளன்று இது போன்ற புகைப்படத்தையா வெளியிடுவது' என்று சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்துவருகின்றனர். சாரா அலிகான் தற்போது தனுஷ், அக்ஷய் குமாருடன் இணைந்து 'அத்ரங்கி ரே' படத்தில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:நெய்வேலியில் விஜய் செய்த தரமான சம்பவம் - வெளியானது புகைப்படம்