கடந்த வாரம் 'தர்பார்' படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்று ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், நாளை ரஜினிகாந்தின் 70ஆவது பிறந்தநாளை முன்னிட்டுபல திரையுலகினரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துவரும் நிலையில் 'தர்பார்' ஸ்பெஷலாக படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து, 'தர்பார்' படத்தின் ட்ரெய்லருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.