தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாக வலம்வந்த சந்தானம், ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அவதாரம் எடுத்தார். அதன்பிறகு ’இனிமே இப்படிதான்’, ‘தில்லுக்கு துட்டு’ என தொடர்ந்து கதாநாயகனாக நடித்துவருகிறார். கடைசியாக அவர் ஜான்சன் இயக்கிய ‘ஏ-1’ படத்தில் தோன்றினார். அதன்பிறகு ‘டகால்டி’, ‘டிக்கிலோனா’ உள்ளிட்ட படங்களில் கமிட்டானார். அவரது ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. இந்நிலையில் சந்தானம் நடித்துவந்த ‘டகால்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
சந்தானத்தின் டகால்டிக்கு முற்றுப்புள்ளி! - dagaalty mp3
சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘டகால்டி’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிந்தது.
Santhanam's Dagaalty Shooting Wrapped
விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், ரித்திகா சென் ஆகியோர் நடித்துள்ள படம் ‘டகால்டி’. இதில் யோகி பாபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். எஸ்பி சவுத்திரியும், சந்தானமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு விஜய் நரேன் இசையமைத்துள்ளார்.
ஒளிப்பதிவு: தீபக் குமார் பதி, எடிட்டிங்: டி.எஸ். சுரேஷ்