தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மீண்டும் இணைகிறது சந்தானம்- ராஜேஷ் கூட்டணி - இயக்குநர் ராஜேஷ்

நகைச்சுவை படங்களில் வெற்றிகண்ட நடிகர் சந்தானம்- இயக்குநர் ராஜேஷ் கூட்டணி அடுத்த ஆண்டு இணையப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Santhanam to team up with M Rajesh

By

Published : Oct 25, 2019, 7:00 PM IST

நடிகர் சந்தானம் நடிகராக நடித்து வெளிவந்த சில படங்கள் தொடர்ந்து தோல்வியையே சந்தித்தது. இருந்தும் தனது மன உறுதியை இழக்காமல் சந்தானம் நடிகராகவே நடிக்க எண்ணினார். அவரின் நம்பிக்கை நிறைவேறும் வண்ணமாக அவர் இறுதியாக நடித்த இரு படங்கள் 'தில்லுக்கு துட்டு-2', 'A1' மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதற்கு முரணாக ஆரம்பத்தில் வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குநர் ராஜேஷ், இறுதியாக இயக்கிய படங்கள் பலவும் தோல்வியை சந்தித்தன.

தற்போது இயக்குநர் ராஜேஷ், தனது படங்களில் காமெடியனாக நடிக்கவைத்த நடிகர் சந்தானத்தை ஹீரோவாக அறிமுகம் செய்யப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இருவரின் கூட்டணி எப்படி இருக்கப்போகிறது என ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பு மிகுந்திருக்கிறது.

இதையும் படிங்க: #PsychoTeaserRelease சைக்கலாஜிக்கல் த்ரில்லரில் கலக்கவரும் 'சைக்கோ' டீசர் ரிலீஸ்

ABOUT THE AUTHOR

...view details