கடந்த ஆண்டு ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடித்த 'ஏ1' திரைப்படம் ஹிட் அடித்தது. சந்தோஷ் நாராயணன் இசையில் அப்படத்தின் பாடல்களும் பரவலாக பேசப்பட்டன. காமெடியை விட்டு விலகி ஹீரோவாக அகலக்கால் வைத்த சந்தானத்திற்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'ஏ1' படம் வெற்றியாக அமைந்தது.
தற்போது அதே சந்தானம், ஜான்சன், சந்தோஷ் நாராயணன் கூட்டணி இணைந்துள்ளது. இப்படத்திற்கு 'பாரீஸ் ஜெயராஜ்' எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் சந்தானம் கானா பாடகராக நடித்துள்ளார்.