தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மாப்பிள்ளை மணி...இபி மணி...கவுண்டமணி ஆக வந்து கலக்கும் 'டிக்கிலோனா' சந்தானம் - ட்ரெய்லர் வெளியீடு! - டிக்கிலோனா பட ட்ரெய்லர்

சென்னை: நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் 'டிக்கிலோனா' படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

சந்தானம்
சந்தானம்

By

Published : Aug 21, 2020, 8:44 PM IST

கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் - சோல்ஜர் பேக்டரி சார்பில் பிரமாண்டமாக தயாராகிவரும் படம் 'டிக்கிலோனா'. முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சத்துடன் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கிறார். படத்தை கார்த்திக் யோகி இயக்குகிறார். சந்தானத்தோடு, இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

நடிகை அனகா, ’நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ படம் மூலம் அறிமுகமான ஷிரின் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். எனர்ஜிடிக் காமெடியன் யோகிபாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த், நிழல்கள் ரவி, சித்ரா லட்சுமணன், மொட்டை ராஜேந்திரன், ஷாரா என படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இடம்பெற்றுள்ளனர்.
சயின்ஸ் பிக்‌ஷன் பாணியில் டைம் மெஷினை மையமாக வைத்து கதை அமைந்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது டிக்கிலோனா படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
டைம் மெஷின் மூலம் சந்தானம் தனது கடந்த காலத்திற்கு செல்லும் போது அங்கு நடக்கும் பிரச்சனைகளை வழக்கம்போல் தன் பாணியில் காமெடியுடன் எதிர் கொள்வதைப் போன்று ட்ரெய்லர் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details