'ஏ1' படத்திற்கு பிறகு சந்தானம் நடித்து வரும் திரைப்படம் 'டகால்டி'. இப்படத்தை இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்த விஜய் ஆனந்த் இயக்கி வருகிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் , செகண்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இப்படத்தின் போஸ்டரை பார்த்த நெட்டிசன்கள் ‘சர்கார்’ பட போஸ்டர் போன்று உள்ளது என கிண்டல் செய்தனர். இதில், சந்தானம் சிகரெட் பிடிப்பது போல் இருந்ததால் பெரும் சர்ச்சையை சந்தித்தது.
சந்தானத்திற்கு ஜோடியான மேற்குவங்க நடிகை! - தமிழ் சினிமாவில் கதாநாயகி அறிமுகம்
சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் 'டகால்டி' படத்தில் மேற்குவங்க நாயகி ரித்திகா சென் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார்.
சர்ச்சைகள் ஒருபக்கம் இருந்தாலும், 'டகால்டி' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் காமெடி கலந்த த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. இது சந்தானத்தின் சினிமா கெரியரில் முக்கியமான படமாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், படத்தின் கதாநாயகி யார் என்று தெரியாமல் இருந்த நிலையில், படக்குழுவினர் நாயகியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரித்திகா சென் 'டகால்டி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
இப்படத்தில் இவரது நடிப்பு பெரியளவில் பேசப்படும் என்று தெரிகிறது. மேலும், படத்தின் அடுத்தடுத்த அப்டேட் வந்துகொண்டிருப்பதால் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.