தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சந்தானத்தின் 'பாரீஸ் ஜெயராஜ்' ஆடியோ நாளை வெளியீடு! - பாரீஸ் ஜெயராஜ் பட பாடல்

சென்னை: சந்தானத்தின் நடிப்பில் உருவாகியுள்ள 'பாரீஸ் ஜெயராஜ்' படத்தின் இசை நாளை (ஜனவரி 28) வெளியாகிறது.

Parris Jeyaraj
Parris Jeyaraj

By

Published : Jan 27, 2021, 7:54 PM IST

ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடித்த 'ஏ1' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி ஹிட் அடித்தது. சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்களும் பரவலாக பேசப்பட்டன. காமெடியை விட்டு விலகி ஹீரோவாக அகலக்கால் வைத்த சந்தானத்திற்கு நீண்ட இடைவெளிக்குப்பிறகு 'ஏ1' படம் வெற்றியாக அமைந்தது.

சந்தானம் - ஜான்சன்- சந்தோஷ் நாராயணன் கூட்டணி மீண்டும் இணைந்தது. இப்படத்திற்கு 'பாரீஸ் ஜெயராஜ்' எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் சந்தானம் கானா பாடகராக நடித்துள்ளார். கானா பாடகர் காதலில் விழுந்தால் என்னவாகும் என்பதே படத்தின் கதை.

இதில் சந்தானத்திற்கு ஜோடியாக அனைகா சோதி, சஸ்டிகா ஆகியோர் நடித்துள்ளனர். 'நான் கடவுள்', 'அவன் இவன்' போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் 'காவாக்குள்ள கல்லுடி', 'புளி மாங்கா புளிப்' என்ற பாடல்கள் வெளியாகின. இந்நிலையில் படத்தின் அனைத்து பாடல்களும் நாளை (ஜனவரி 28) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இன்டர்வலே இல்லாத விஜய் சேதுபதி படம்!

ABOUT THE AUTHOR

...view details