’ஜெயம்கொண்டான்’, ‘கண்டேன் காதலை’ உள்ளிட்ட படங்களை இயக்கிய கண்ணன், சந்தானத்தை வைத்து புதிய படமொன்றை இயக்கவுள்ளார். இந்தப் படத்துக்கு ‘வித்தைக்காரன்’ என தலைப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க கிராமத்து சப்ஜெக்டாக இத்திரைப்படம் உருவாக இருக்கிறது.
வித்தைக்காரன்: ஸ்டண்ட் சில்வாவிடம் சிலம்பம் கற்கும் காமெடி நடிகர்! - kannan
வித்தைக்காரன் என்ற படத்தில் நடிப்பதற்காக ஸ்டண்ட் சில்வாவிடம் நடிகர் சந்தானம் சிலம்பம் கற்று வருகிறார்.
santhanam
திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இதன் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். செப்டம்பர் 3ஆம் தேதி தொடங்கி 45 நாட்கள் இதன் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இந்த படத்துக்காக ஸ்டண்ட் சில்வாவிடம் சிலம்பாட்டப் பயிற்சி பெற்று வருகிறார் சந்தானம்.
முன்னதாக சந்தானம் தன்னுடைய ‘டகால்டி’ , சர்வர் சுந்தரம்’ ஆகிய படங்களின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.