தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சந்தானத்தின் 'AGEnT கண்ணாயிரம்' டீசர் வெளியீடு - santhanam movie teaser trends on number 1 in youtube trending

சந்தானம் நடிப்பில் உருவாகிவரும் AGEnT கண்ணாயிரம் திரைப்படத்தின் டீசர் வெளியாகி, யூ- ட்யூப் டிரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

சந்தானத்தின் 'ஏஜென்ட் கண்ணாயிரம்' டீசர் வெளியீடு!
சந்தானத்தின் 'ஏஜென்ட் கண்ணாயிரம்' டீசர் வெளியீடு!

By

Published : Jan 21, 2022, 12:52 PM IST

2019ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா படத்தின் தமிழ் ரீமேக் திரைப்படம் 'AGEnT கண்ணாயிரம்'. இத்திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நவீன் பொலிஷெட்டி நடித்திருந்தார். பெட்டி கேஸ்களை துப்பறிந்து கொண்டிருந்த நாயகனுக்கு எதிர்பாராதவிதமாக ஒரு பெரிய கேஸ் கிடைக்கிறது.

அதன் முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழ்க்கையில் எதிர்பாராத ரகசியங்கள் உடைபட ஆரம்பிக்கும். இந்த இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் திரைக்கதையை நகைச்சுவையுடன் எடுத்திருந்தது படத்துக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது.

லேப்ரிந்த் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படத்தை மனோஜ் பீத்தா இயக்கியுள்ளார். இதில் சந்தானத்துடன் ஊர்வசி, குக் வித் கோமாளி புகழ், முனிஸ்காந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் 'AGEnT கண்ணாயிரம்' திரைப்படத்தின் டீசர் வெளியான சிறிது நேரத்தில் யூ- ட்யூப் டிரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதனால் சந்தானத்தின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:மம்முட்டியைத் தொடர்ந்து துல்கர் சல்மானுக்கு கரோனா பாசிட்டிவ்

ABOUT THE AUTHOR

...view details