நாளைய இயக்குநர் சீசன் நான்கில் வெற்றியாளரான இயக்குநர் ஜான்சன், காமெடி ஜானரில் சந்தானத்தை வைத்து 'ஏ1' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில், சந்தானம், அக்ரஹாரத்து பெண்ணாக பாலிவுட் நடிகை தாரா அலிசா, கெட்ட வார்த்தை பேசும் காவலராக சாய்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தில்லுக்கு துட்டு 2 படத்தின் வெற்றிக்கு பிறகு சந்தானம் நடித்துள்ள ஏ1 படம் கமர்ஷியல் கலந்த காமெடி படமாக உருவாகியுள்ளது.
'கறிக் கொழம்புல எலும்பு.. உன் கதையே வேணாம் கிளம்பு..!' - 'ஏ1' டீசர் ரிலீஸ் - santhanam
இயக்குநர் ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள 'ஏ1' படத்தின் டீசர் கலகலப்பான நகைச்சுவை நிறைந்த காதல் காட்சிகளுடன் வெளியாகியுள்ளது.
ஏ1 படம் வருகின்ற ஜூலை 26ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் செகன்ட் டீசர் வெளியாகியுள்ளது. ஒரு நிமிடம் 37 நொடிகள் இடம்பெறும் இந்த டீசரில் காமெடி என்டர்டெயினராக உருவாகியுள்ளது. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஆப்பாயில் சாப்பிட்டு காதலை சொல்லும் அக்ரஹாரத்து பெண், லோக்கல் பசங்களாக இருந்தாலும் சந்தானத்தின் டைமிங் காமெடி இன்னும் குறையவில்லை.
நொடிக்கு நொடி சிரிப்பு அலை வீசுகிறது. பக்காவான காமெடி கலந்த காதல் கதையாக ஏ1 தயாராகியுள்ளது. இதுவரை சந்தானம் கதாநாயகனாக நடித்த படங்களில் தில்லுக்கு துட்டு தவிர வேறு எந்த படங்களும் பெயர் சொல்லும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. ஏ1 படத்தை ரொம்பவும் நம்பியுள்ளார்.