தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நடிகைக்கு முன் மருத்துவர் அவதாரம்; கலக்கும் ஷங்கர் மகள்! - மருத்துவரான இயக்குநர் மகள்

ஷங்கரின் இளைய மகள் அதிதி மருத்துவப் படிப்பை முடித்து பட்டம் பெற்றுள்ள புகைப்படங்களை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது திரைப்படமொன்றில் நடித்துவரும் அதிதி, நாயகியாக அறிமுகமாவதற்கு முன்னரே மருத்துவரானது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மருத்துவர் பட்டம் பெற்ற அதிதி
மருத்துவர் பட்டம் பெற்ற அதிதி

By

Published : Dec 12, 2021, 6:06 PM IST

இயக்குநர் ஷங்கருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் ஆகியோர் உள்ளனர். மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு சமீபத்திலேயே திருமணம் நடைபெற்ற நிலையில், இளைய மகள் அதிதி எம்பிபிஎஸ் முடித்துள்ளார்.

தற்போது முத்தையா இயக்கத்தில் கார்த்திக்கு ஜோடியாக ‘விருமன்’ படத்தில் நடித்து வருகிறார், அதிதி. சூர்யா - ஜோதிகா தயாரிக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.

மருத்துவர் பட்டம் பெற்ற அதிதி

இந்நிலையில் அதிதி படித்த ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அப்போது தமிழ்நாடு சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், அதிதிக்கு பட்டம் வழங்கினார்.

தனது மகள் பட்டம் பெறுவதைக் காண ஷங்கர், தனது குடும்பத்தினருடன் பட்டமளிப்பு விழாவிற்குச் சென்றிருந்தார். அப்போது பட்டம் பெற்றபிறகு, தனது தந்தை ஷங்கருடன் நிற்கும் புகைப்படத்தை அதிதி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

மகளுடன் ஷங்கர்

இதனைக் கண்ட பலரும், "நடிகையாவதற்கு முன்னரே மருத்துவராகிட்டீங்க வாழ்த்துகள்!'' எனத் தெரிவித்துள்ளனர். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இதையும் படிங்க:'பீஸ்ட்'டில் நடித்து முடித்த விஜய்!

ABOUT THE AUTHOR

...view details