தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'கேஜிஎஃப்' ராக்கி பாயை எதிர்க்கும் பவர்புல் வில்லன் 'ஆதிரா' ஃபர்ஸ்ட் லுக் - Kgf chapter 2 sanjay dutt

'கேஜிஎஃப் 2' படத்தில் நடித்துவரும் சஞ்சய் தத்தின் 'ஆதிரா' கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

சஞ்சய் தத்
சஞ்சய் தத்

By

Published : Jul 29, 2020, 3:33 PM IST

கன்னடத் திரையுலகிலிருந்து 2018ஆம் ஆண்டு பிரமாண்டமாக வெளியானது 'கேஜிஎஃப்'. இப்படத்தில் நடிகர் யஷ் நாயகனாக நடித்திருந்தார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது.

வெளியான சில நாள்களிலேயே ரூ.100 கோடி வசூல் சாதனை படைத்தது. சிறந்த சண்டைக் காட்சி, சிறந்த விஎஃப்எக்ஸ் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் தேசிய விருது பெற்றது.

தற்போது கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகிவருகிறது. இதற்காக கோலார் தங்கவயல் அருகே உள்ள சியானிடே மலைப்பகுதியில் செட் போடப்பட்டு, படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. தற்போது கரோனா தொற்று அச்சம் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் முதல் பாகம் அதிரடியான வெற்றி முத்திரையை பதித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் கருடன் கொல்லப்பட்டதற்கு பின்பு நடக்கும் கதையாக உருவாகிறது. இதில் கருடனின் அண்ணனாக சஞ்சய் தத் ஆதிரா கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

சமீபத்தில் சஞ்சய் தத்தின் கெட்டப் வலைதளத்தில் வைரலாகி வந்தது. இன்று (ஜூலை 29) தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் சஞ்சய் தத்துக்கு கேஜிஎஃப் படக்குழுவினர், ஆதிரா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

போஸ்டர் வெளியான சில நிமிடங்களில் சமூக வலைதளத்தில் ட்ரென்ட் ஆகியுள்ளது. கேஜிஎஃப் ராக்கியை எதிர்த்து சண்டையிடும் பவர்புல் வில்லனாக சஞ்சய் தத் இருப்பார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர். சஞ்சய் தத் 'அக்னிபத்' படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தது அனைவருக்கும் தெரிந்ததே.

ABOUT THE AUTHOR

...view details