தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

32இல் அடியெடுத்து வைத்த சஞ்சனா கல்ராணி! - sanjana galrani

கன்னட திரையுலகில் முன்னணி நடிகை சஞ்சனா கல்ராணி பிறந்த நாளான இன்று அவரது ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

sanjana-galrani-birthday
sanjana-galrani-birthday

By

Published : Oct 10, 2021, 8:25 AM IST

சென்னை : கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் சஞ்சனா கல்ராணி. 1989 ஆம் ஆண்டு பிறந்த இவர் ஒரு காதல் செய்வீர் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

சஞ்சனா கல்ராணி

கன்ட கென்டதி என்ற கன்னடத் திரைப்படத்தின் வாயிலாக கன்னடத் திரைப்படங்களில் அறிமுகமானார். பூரி ஜெகன்நாத் இயக்கிய புஜ்ஜிகடு தெலுங்குத் திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக பல்வேறு புதிய திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பினைப் இவர் பெற்றார்.

சஞ்சனா கல்ராணி

இவர் தமிழில் முன்னனி நடிகையான நிக்கி கல்ராணியின் சகோதரி ஆவார். இவர் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது நடிப்பதற்கான வாய்ப்பினைப் கிடைத்துள்ளது.

தங்கை நிக்கி கல்ராணியுடன் சஞ்சனா கல்ராணி

இதைத் தொடர்ந்து வந்த வாய்ப்புகளை பகுதி நேரமாக பயன்படுத்திக் கொண்டு படிப்பினை தொடர்ந்தார்.

சஞ்சனா கல்ராணி

இவர் சுமார் 60க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார். இவரின் பிறந்தநாளான இன்று அவரது ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சஞ்சனா கல்ராணி

இதையும் படிங்க : HBD ரகுல் பிரீத் சிங்

ABOUT THE AUTHOR

...view details