தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'சங்கத்தமிழன்' ஆக டப்பிங் பேசும் விஜய் சேதுபதி!

விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துவரும் 'சங்கத்தமிழன்' படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது.

vijay sethupathi

By

Published : Aug 4, 2019, 6:39 PM IST

விஜயா புரொடக்க்ஷன்ஸ்" தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்து வரும் திரைப்படம் 'சங்கத்தமிழன்'. வாலு, ஸ்கெட்ச் ஆகிய படங்களை இயக்கிய விஜய் சந்தர் இப்படத்தை இயக்கியுள்ளார். குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் படமாக உருவாகி வரும் இப்படத்தில், நிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணா ஆகியோர் முதன்முதலாக விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். இவர்களுடன் சூரி, அசுதோஷ் ராணா, ரவி கிஷான், நாசர், ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

சங்கத்தமிழன் டப்பிங் பணி

குற்றாலம் தென்காசி ஆகிய இடங்களில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் காரைக்காலில் நிறைவடைந்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் சங்கத்தமிழனின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. கதைக்கு ஏற்றார்போல் வித்தியாசப்படுத்தி நடிக்கும் விஜய் சேதுபதி, இப்படத்தில் இரண்டு கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் செய்தி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

டப்பிங் பேசும் விஜய் சேதுபதி

சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் சங்கத்தமிழன் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன. பூஜையுடன் தொடங்கிய இந்த நிகழ்வில் விஜய் சேதுபதி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து, தனது கதாபாத்திரத்திற்கான டப்பிங் ஆரம்பித்துள்ளார். இந்த திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details