சென்னை: எளிய மனிதர்களின் வாழ்வை பிரதிபலிக்கும் படமாக 'சங்கத்தலைவன்' உருவாகி உள்ளதாக அந்தப் படத்தின் இயக்குநர் மணிமாறன் தெரிவித்துள்ளார்.
உதயம் என்எச் 4 படத்தை இயக்கிய மணிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'சங்கத்தலைவன்'. இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, கருணாஸ், சுனு லட்சுமி, ரம்யா, மாரிமுத்து பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
எழுத்தாளர் பாரதிநாதன் எழுதிய 'தறியுடன்' என்ற நாவலை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் வெற்றிமாறன், சமுத்திரக்கனி, கருணாஸ், இயக்குநர் மணிமாறன், எழுத்தாளர் பாரதிநாதன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய இயக்குநர் மணிமாறன், இந்த நாவலை படித்தவுடனே இதை படமாக எடுக்க வேண்டும் என்ற ஆவல் தோன்றியது. இதற்கு வெற்றிமாறன் உதவியாக இருந்தது மட்டுமின்றி, தயாரிக்கவும் முன்வந்தார். அவருக்கு நன்றி. எளிய மனிதர்களின் வாழ்வை பிரதிபலிக்கும் படமாக சங்கத்தலைவன் உருவாகி உள்ளது என்று கூறினார்.
எளிய மனிதர்களின் வாழ்வை பிரதிபலிக்கும் படமாக சங்கத்தலைவன் இருக்கும் நடிகர் சமுத்திரக்கனி பேசும்போது, படத்தில் கருணாஸின் நடிப்பு கண்கலங்க வைத்தது. மாரிமுத்துவை பார்த்தாலே பயமாக உள்ளது. ரம்யா சிறப்பாக நடித்துள்ளார். இந்தப் படம் எனக்கு கடவுள் கொடுத்த பரிசாக நினைக்கிறேன். என் வாழ்வில் மிகப் பெரிய படைப்பில் ஒன்றாக இருப்பது சந்தோஷம் என்றார்.
என் வாழ்வில் மிகப் பெரிய படைப்பில் இருப்பது சந்தோஷம் நடிகை ரம்யா பேசும்போது, இந்தப் படத்தில் நடிப்பது பற்றி வெளியில் யாரிடமும் சொல்லாமல் இருந்தேன். டிவி தொகுப்பாளராகவும், நகரத்துப் பெண்ணாகவும் பார்த்து பழகிய என்னை இதுமாதிரியான கேரக்டரில் எப்படி ஏற்றுக்கொள்ளபோகிறார்கள் என்ற பயம் இருந்தது. இந்தக் கதாபாத்திரத்துக்கு நான் சரியாக இருப்பேன் என தேர்வு செய்த இயக்குநர் மணிமாறன், வெற்றிமாறன், சமுத்திரகனிக்கு எனது நன்றி. இந்தப் படம் மிகப்பெரிய பெயரை வாங்கிக்கொடுக்கும் என நம்புகிறேன். படத்துக்கு உங்களது ஆதரவை தரவேண்டும் என்றார்.
சங்கத்தலைவன் மிகப் பெரிய பெயரை வாங்கிக்கொடுக்கும் என நம்புகிறேன் நடிகர் கருணாஸ் பேசும்போது, மற்ற ஹீரோக்கள் தாடி வளர்த்தால் மட்டும், அடுத்த படத்தின் கெட்டப்பா என்று கேட்கிறீர்கள். நான் வைத்தால் மட்டும் என்ன கோயிலுக்கு நேர்த்திக்கடனா என்று கேட்பது ஏன் என்று காமெடியாக பேசினார்.
இனி அந்த தவறை நான் செய்ய மாட்டேன் தொடர்ந்து பேசிய அவர், நானும் எனது புதிய படத்துக்காகத்தான் இந்த தாடியை வைத்தேன். சினிமாவில் இன்றைய சூழலில் நல்ல படங்களை எடுப்பது கடினம் என்பதால் எனது முயற்சியை விட்டுவிட்டேன். இனி சொந்த படம் எடுக்கும் அந்த தவறை எனது வாழ்வில் செய்ய மாட்டேன் என்றார்.
நடிகர் மாரிமுத்து பேசும்போது, லாக்டவுனுக்கு பிறகு சினிமா உலகம் இயங்க ஆரம்பித்துள்ளது. மக்கள் திரையரங்குக்கு வரும் பழக்கம் மறந்துவிடுமோ என்ற பயம் இருந்த நிலையில், மாஸ்டர் போன்ற படங்களின் ரிலீஸால் மீண்டும் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வர தொடங்கியுள்ளார்கள்.
நாம் அணியும் 120 ரூபாய் மதிப்பு லுங்கியில் ஒரு மனிதரின் கடுமையான உழைப்பு உள்ளது சங்கத்தலைவன் கதைக்களம் இதுவரை பார்க்காத களம். ஒரு விசைத்திறி தொழிலாளர்கள் லுங்கியை நெய்யும் முறையும், அதிலுள்ள வடிவத்தை கொண்டு வருவதற்கு அவர்கள் வெளிப்படுத்தும் உழைப்பும் வியப்பாக இருந்தது. நாம் அணியும் 120 ரூபாய் மதிப்பு லுங்கியில் ஒரு மனிதரின் கடுமையான உழைப்பு உள்ளது என்றார்.
இதையும் படிங்க: ருத்ர தாண்டவத்தில் இணைந்த பிரபலம்!