தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கண்ணான கண்ணே - ரியல் சாண்டிக்கும் ரீல் சாண்டிக்கும் முத்தம் கொடுத்த லாலா! - சாண்டி லாலா

நடன இயக்குநர் சாண்டி வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

lala

By

Published : Nov 3, 2019, 6:39 PM IST

பிக் பாஸ் சீசன் 3-இல் கலந்துக்கொண்ட நடன இயக்குநர் சாண்டி, இறுதிச்சுற்று வரை சென்றார். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வதற்கு முன்பும் தமிழ் மக்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். பிக் பாஸில் இருந்து வெளியேறிய பின்பு சாண்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகளின் வீடியோவை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டு வருகிறார்.

லாலா - சாண்டி

அந்தவகையில், தற்போது புதிய வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் சாண்டியின் நண்பரும் இயக்குநருமான தமிழரசன் ஒரு ஓவியத்தைப் பரிசாக கொடுத்துள்ளார். அந்த ஓவியத்தில் சாண்டி, அவரது மகள் லாலா இருவரின் படத்தையும் கருப்பு - வெள்ளை நிறத்தில் அழகாக வரைந்துள்ளார். இந்த வீடியோவின் பின்னால் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் பாடலான கண்ணான கண்ணே பாடல் ஒலிக்க லாலா அந்த ஓவியத்திற்கு முத்தம் கொடுக்கிறாள். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இணையத்தில் வைரலாகும் லாலா வீடியோ

ABOUT THE AUTHOR

...view details