பெங்களூருவிலுள்ள இந்திரா நகர் பகுதியில் நடிகை சஞ்சனா வசித்துவரும் நிலையில், மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் இன்று (செப். 8) அதிகாலை 6 மணிக்கு அவரது வீட்டிற்குச் சென்றுள்ளனர். இதையடுத்து அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.
நடிகை சஞ்சனா கல்ராணி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை - நடிகை சஞ்சனா கல்ராணி
07:19 September 08
போதைப்பொருள் விவகாரம் கன்னட திரையுலகினரிடையே விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், நடிகை ராகினி திவேதி கைதுக்குப் பின் தற்போது சஞ்சனா கல்ராணி வீட்டில் சோதனை நடைபெறுகிறது.
ஏற்கனவே போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக சஞ்சனாவின் உதவியாளர் ராகுல், நடிகை ராகினி திவிவேதி, அவரது நண்பர் ரவிசங்கர் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது ராகினி திவிவேதி காவல் துறையினரின் காவலில் இருக்கிறார்.
இதையடுத்து போதைப்பொருள் விவகாரத்தில் கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் சஞ்சனா கல்ராணி வீட்டில் சோதனை நடத்தப்பட்டுவருவது சான்டல்வுட் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பிரபல கன்னட நடிகை வீட்டில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிரடி சோதனை!