தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'சண்டக்காரி' ஸ்ரேயா விமலுக்கு 'தி பாஸ்' - திலீப்

குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் வகையில் 'சண்டக்காரி - தி பாஸ்' படம் இருக்கும் என இயக்குநர் மாதேஷ் தெரிவித்துள்ளார்.

my boss

By

Published : Sep 1, 2019, 1:47 PM IST

தமிழில் மதுர, சாக்லட், அரசாங்கம், மிரட்டல் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ஆர்.மாதேஷ் நடிகர் விமலை வைத்து ‘சண்டைக்காரி - தி பாஸ்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

விமலுடன் ஸ்ரேயா, கே.ஆர். விஜயா, ரேகா, சத்யன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தை பாஸ் புரொடக்‌ஷன்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் மெட்ரோ நெட் மல்டி மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.

மாதேஷ்- விமல்- ஸ்ரேயா

இப்படம் குறித்து இயக்குநர் மாதேஷ் கூறுகையில், மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் திலீப், நடிகை மம்தா மோகன் தாஸ் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற ‘மை பாஸ்’ என்ற படத்தை தழுவி இப்படம் எடுக்கப்படுகிறது.

முழுக்க முழுக்க குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் வகையில் காமெடி கலந்த ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகிறது. இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details