மாடலிங் துறையில் கலக்கிவரும் சனம் ஷெட்டி 'அம்புலி' படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தென் இந்திய மொழிப் படங்களில் நடித்துவரும் இவர், சமீபத்தில் ஹன்சிகா - சிம்பு நடித்துவரும் 'மஹா' படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.
சிபிராஜ் படத்தில் திருப்புமுனை கேரக்டரில் சனம் ஷெட்டி - போலீஸ் அதிகாரியாக சிபிராஜ்
சென்னை: க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகிவரும் வால்டர் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை சனம் ஷெட்டி.
இதைத்தொடர்ந்து தற்போது சிபி ராஜ் காவல் அலுவலராக நடித்துவரும் 'வால்டர்' படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இதுவரை ஹீரோயினாக நடித்த சனம் ஷெட்டி, இந்தப் படத்தில் மிகவும் ஸ்டைலிஷ் கேரக்டரில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மிகப்பெரிய பார்மெசி நிறுவனத்தின் சிஇஓ-வாக வரவிருக்கும் இவர் நெகடிவ் கதாபாத்திரத்தில் தோன்றவுள்ளராம்.
படத்தின் ஹீரோயினாக ஷரின் கன்ச்வாலா நடிக்கிறார். இவர் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தில் நடித்திருந்தார். இயக்குநர் கெளதம் மேனன், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்தை புதுமுக இயக்குநர் அன்பரசன் இயக்குகிறார்.