அம்மாவோடு ஜாலியாக உடற்பயிற்சி மேற்கொண்ட சம்யுக்தா - சம்யுக்தா ஹெக்டே புதிய வீடியோ
தனது அம்மாவுடன் வீட்டிலிருந்தபடியே ஜாலியாக உடற்பயிற்சி மேற்கொள்ளும் சம்யுக்தாவின் புதிய வீடியோவை நெட்டிசன்கள் அதிகமாக லைக் செய்துள்ளனர்.
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ படத்தில், அவருக்குப் பள்ளிப்பருவ காதலியாக நடித்திருந்தவர் சம்யுக்தா ஹெக்டே. உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் உடைய இவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பல்வேறு வகையான உடற்பயிற்சிகளையும் உடற்பயிற்சி அறிவுரைகளையும் பகிர்ந்துவருகிறார்.
இதற்கிடையே மாடலிங் போட்டோ ஷூட், ஆண் நண்பருடன் பீச் பிகினி ஷூட்டும் நடத்துவார் வீட்டில் இருந்தபடி உடற்பயிற்சி மேற்கொண்டு வரும் சம்யுக்தா தனது அம்மாவுடன் hoopflow ஜிம்னாஸ்டிக் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ நெட்டிசன்களால் அதிகம் லைக் செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில், தோழிகளுடன் சம்யுக்தா பூங்கா ஒன்றில் உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது, அவரது ஆடை குறித்து விமர்சனம் செய்து தாக்கியதாக கூறி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கவிதா ரெட்டி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.