பழம்தமிழர் பண்பாட்டின் சிறப்பம்சங்களை எடுத்துரைக்கும்விதமாக கடந்த சில நாட்களுக்குமுன் வெளியிடப்பட்ட கீழடி அகழாய்வு தொடர்பான முடிவுகள் அமைந்திருந்தன.
இந்த ஆய்வில் முக்கிய அம்சமாக, கீழடி நாகரிகம் இரண்டாயிரத்து 600 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. அப்போதைய மக்கள் எழுத்தறிவோடு வாழ்ந்துள்ளனர் என்ற தகவல் தமிழனின் பெருமையை பறைசாற்றும்விதமாக அமைந்துள்ளது. இது தொடர்பாக நாள்தோறும் புதிய தகவல்களும் மீம்ஸ்களும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.