இயற்கை விவசாயத்தின் அடையாளமாக இருந்தவர் நம்மாழ்வார். மனிதர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் மட்டுமே ஆரோக்கியமான சூழல் இங்கு நிலவும் என்று தன் வாழ்நாள் முழுவதும் வலியுறுத்தியவர். இந்நிலையில், இவரின் பிறந்தநாள் ஏப்ரல் 6 ஆம் தேதி கொண்டாடப்பட்டது.
உனக்கான உணவை நீ உற்பத்தி செய்யப் பழகியிருந்தால் அஞ்ச வேண்டாம் - நம்மாழ்வாரைக் குறித்து ட்வீட் செய்த சமுத்திரகனி! - நம்மாழ்வார்
இயற்கை விவசாயி நம்மாழ்வாரின் பிறந்த தினத்தை ஒட்டி சமுத்திரகனி தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் குறித்தப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
![உனக்கான உணவை நீ உற்பத்தி செய்யப் பழகியிருந்தால் அஞ்ச வேண்டாம் - நம்மாழ்வாரைக் குறித்து ட்வீட் செய்த சமுத்திரகனி! Samuthirakani](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6709483-280-6709483-1586341544656.jpg)
Samuthirakani
இவரின் இந்தப் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குநரும், நடிகருமான சமுத்திரகனி தனது ட்விட்டர் பக்கத்தில், "என்றோ ஒரு நாள் ஏதோ ஒரு காரணத்தினால், உனக்காக எங்கிருந்தோ வந்து கொண்டிருந்த உணவு நிறுத்தப்படலாம். வாகனங்கள் ஓடுவது நின்று போயிருக்கலாம். கப்பல்கள் மிதப்பதையும், விமானங்கள் பறப்பதையும் கூட நிறுத்தியிருக்கலாம்.
ஆனால் உனக்காக உணவை நீ உற்பத்தி செய்யப் பழகியிருந்தால், இவற்றையெல்லாம் எண்ணி அஞ்ச வேண்டிய அவசியம் இருக்காது" என்று பதிவிட்டுள்ளார்.
Last Updated : Apr 11, 2020, 1:20 PM IST