தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இன்னது நான் ஓட்டு போடலையா? - ஆதாரத்துடன் நிரூபித்த சமுத்திரக்கனி - samuthirakani latest

சென்னை: நடிகர் சமுத்திரக்கனி தாம் ஓட்டுப்போடவில்லை என்று வந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சமுத்திரக்கனி
சமுத்திரக்கனி

By

Published : Apr 7, 2021, 10:33 PM IST

தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (ஏப்.6) நடைபெற்று முடிந்தது. இதில் திரைப்பிரபலங்கள் ஏராளமானோர் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

ஆனால் சில திரைப்பிரபலங்கள் வாக்களிக்கவில்லை என்ற பட்டியல் ஊடகங்களில் வெளியிடப்பட்டது. இதில் நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனியின் பெயரும் இருந்தது.

இன்னது நான் ஓட்டு போடலையா? - ஆதாரத்துடன் நிரூபித்த சமுத்திரக்கனி

இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து சமுத்திரக்கனி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நான் ஓட்டுப்போடவில்லை என்று தகவல் வருகிறது. நான் முதல் ஆளாகச் சென்று, எனது வாக்கை பதிவு செய்துவிட்டேன்.

எனது பூத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டதால் தாமதமானது. இருப்பினும் பொறுமையாக இருந்து எனது வாக்கைப் பதிவு செய்துள்ளேன். நான் விளம்பரப்படுத்தவில்லை, எனவே இது யாருக்கும் தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details