தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பிரகாஷ் ராஜ் பாத்திரத்தில் இவரா... அருண் விஜய் படத்தில் ஏற்பட்ட மாற்றம்! - சமுத்திரகனி பட அப்டேட்

அருண் விஜய் - ஹரி கூட்டணியில் உருவாகிவரும் 'AV33' படத்தில் நடிகர் சமுத்திரக்கனி இணைந்துள்ளார்.

அருண் விஜய்
அருண் விஜய்

By

Published : Aug 27, 2021, 10:25 AM IST

Updated : Aug 27, 2021, 11:15 AM IST

இயக்குநர் ஹரி இயக்கிவரும் புதிய திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துவருபவர் அருண் விஜய். தற்காலிகமாக AV33 என்று அழைக்கப்படும் இந்தப் படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகிவருகிறது. இதில் இவரது அண்ணன் கதாபாத்திரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் நடித்துவந்தார்.

இதனிடையே சமீபத்தில் ஒரு விபத்தில் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதையடுத்து பிரகாஷ் ராஜ் ஹைதராபாத்தில் சிகிச்சைப் பெற்றார். இதனையொட்டி தன்னால் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாது என்றும், தான் வாங்கிய முன்பணத்தைத் திருப்பித் தருவதாகப் படக்குழுவினரிடம் தெரிவித்தார்.

அருண் விஜய்

இதனால் அவர் நடித்த கதாபாத்திரத்தில் தற்போது சமுத்திரக்கனி நடித்துவருகிறார். #AV33 படத்தின் படப்பிடிப்பு சென்னை, காரைக்குடி, தூத்துக்குடி, ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற நிலையில், தற்போது பழனியில் நடந்துவருகிறது.

இப்படத்தில் யோகி பாபு, ராதிகா, கருடா ராம், ராஜேஷ், அம்மு அபிராமி, ஜெயபாலன், புகழ், போஸ்வெங்கட், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, ஐஸ்வர்யா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கிராமத்துப் பின்னணி கலந்த, குடும்பங்கள் கொண்டாடும் ஆக்ஷன் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வெளியானது சிம்பு தேவனின் கசடதபற

Last Updated : Aug 27, 2021, 11:15 AM IST

ABOUT THE AUTHOR

...view details