இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி சமீபத்தில் கங்கனா நடிப்பில் உருவாகிவரும் 'தலைவி' படத்தில் தனக்கான கதாபாத்திரத்தில் நடித்து முடித்துக்கொடுத்துள்ளார். தற்போது இயக்குநர் பா. இரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரெடக்ஷன் தயாரிக்கும் 'ரைட்டர்' என்னும் படத்தில் சமுத்திரக்கனி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
'ரைட்டர்' அவதாரம்: சமுத்திரக்கனியின் லேட்டஸ்ட் அப்டேட் - பா.இரஞ்சித்தின் படங்கள்
சென்னை: சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகவுள்ள புதிய படத்திற்கு 'ரைட்டர்' (Writer) எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

samu
இந்தப் படத்தை ஃபிராங்கிளின் ஜேக்கப் (Franklin Jacob) இயக்குகிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். தற்போது இந்தப் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இதனைப் பார்க்கும்போது காவல் துறையில் இருக்கும் ரைட்டர் பதவி குறித்தான கதையசம்சத்தைக் கொண்டிருக்கும் எனச் சமூக வலைதளத்தில் கருத்துகள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற கதாபாத்திரங்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.