தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாகும் வெள்ளை யானை - latest kollywood movies

சென்னை: நடிகர் சமுத்திரக்கனி நடித்துள்ள ‘வெள்ளை யானை' திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகவுள்ளது.

வெள்ளை யானை
வெள்ளை யானை

By

Published : Jun 11, 2021, 12:19 PM IST

கரோனா அச்சுறுத்தல் காரணமாகத் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், பெரும்பாலான படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஒரு சில படங்களோ தொலைக்காட்சியில் வெளியாகிறது.

அந்தவகையில் தற்போது சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள, ‘வெள்ளை யானை' திரைப்படம் நேரடியாக சன் தொலைக்காட்சியில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

‘திருடா திருடி’ பட இயக்குநர் சுப்பிரமணிய சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் ஆத்மியா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

முன்னதாக, ‘ஏலே’, ‘மண்டேலா’ ஆகிய படங்கள் நேரடியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கும் நயன்தாரா படம்

ABOUT THE AUTHOR

...view details