நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சித்திரைச் செவ்வானம்'. இப்படம் அடுத்த மாதம் 3ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இது குறித்து இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி கூறியதாவது, "சித்திரைச் செவ்வானம் ஒரு அழகான திரைப்படம். என் தம்பி ஃபைட் மாஸ்டர் சில்வா திடீரென ஒருநாள் வந்து, என்னிடம் ஒரு கதை சொன்னார்.
அவரிடமிருந்து இப்படி ஒரு கதையை நான் எதிர்பார்க்கவில்லை. ஒரு அப்பா, பொண்ணு இருவருக்குமிடையிலான உணர்வுப்பூர்வமான பந்தம், அவர்களின் வாழ்க்கைப் பயணம், அதில் நடக்கும் பிரச்சினைகள்தாம் கதை.
சுத்தமாக எதிர்பார்க்கவில்லை
இப்படி மனத்தை உருக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான கதையை, என் தம்பி சொல்வார் என நான் சுத்தமாக எதிர்பார்க்கவேயில்லை. கேட்டதுமே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. உடனே படப்பிடிப்பிற்குப் போகலாம் என்றேன். மிக அற்புதமான படமாக உருவாக்கிவிட்டார்.
இம்மாதிரியான ஒரு மிகச்சிறந்த படத்தில் என்னையும் பங்கேற்க வைத்ததற்கு சில்வாவுக்கு நன்றி. இது நம் சமூகத்திற்கு அவசியமான திரைப்படம். அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் திரைப்படமாக இருக்கும்" என்றார்.
படத்தின் இயக்குநர் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா கூறுகையில், "இயக்குநர் விஜய் என்னிடம் ஒரு கதை சொன்னார். அட்டகாசமாக இருந்தது. இந்தக் கதையை நீங்கள் இயக்குங்கள் நன்றாக இருக்கும் என்றார். எனக்கும் அந்தக் கதையை இயக்கலாம் என்று தோன்றியது. உடனடியாக அந்தக் கதையை நிறைய மேம்படுத்தி, முழு திரைக்கதையாக மாற்றினோம். பின் சமுத்திரக்கனியிடம் இந்தக் கதையைச் சொன்னேன்.