தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மார்வெல் பற்றி பேசிய மார்டினுக்கு சாமுவேல் பதிலடி! - சாமுவேல் ஜாக்சன்

மார்வெல் எடுப்பதெல்லாம் படங்களே இல்லை என விமர்சித்த பழம்பெரும் இயக்குநர் மார்டின் ஸ்கார்சஸிக்கு சாமுவேல் ஜான்சன் பதிலடி கொடுத்துள்ளார்.

Samuel Jackson reply to Martin Scorsese

By

Published : Oct 6, 2019, 9:51 PM IST

ஆஸ்கர் விருதுபெற்ற இயக்குநர் மார்டின் ஸ்கார்சஸி, மார்வல் எடுப்பதெல்லாம் படங்களே இல்லை. ஆனால் அதை பார்க்க முயற்சி செய்திருக்கிறேன் என ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இவருடைய இந்த கருத்துக்கு புகழ்பெற்ற நடிகர் சாமுவேல் ஜாக்சன் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சாமுவேல் ஜாக்சன், மார்டினின் கருத்து பக்ஸ் பன்னி நகைச்சுவையாக இருக்காது என்று கூறுவதுபோல் உள்ளது. அவர் படங்களையும் பிடிக்காதவர்கள் இருக்கதான் செய்வார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும், அதுபற்றி கூறலாம். இங்கு யாருடைய கருத்தும் மற்றவர்கள் படம் எடுப்பதை நிறுத்தப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

மார்டின் ஸ்கார்சஸி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஐரிஷ் மேன்’ திரைப்படம் வரும் நவம்பர் 1ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க: சிறுத்தையுடன் பாயத் தயாராகும் ரஜினி!

ABOUT THE AUTHOR

...view details