'வாரணம் ஆயிரம்' படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் நடிகை சமீரா ரெட்டி. இவர் கடந்த 2014ஆம் ஆண்டு தொழிலதிபர் அக்ஷய் வர்தேவை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு கடந்த 2015ஆம் ஆண்டு ஒரு மகனும், 2019ஆம் ஆண்டு ஒரு மகளும் பிறந்தனர். திருமணத்துக்கு பிறகு அவர் முன்பு போல் சினிமாவில் இயங்குவதில்லை. எனினும் சமூக வலைதள பக்கங்களில் படு ஆக்டிவாக இருக்கிறார்.
இந்நிலையில் சமீரா ரெட்டி, தனது தந்தையுடன் வெள்ளை முடியை மறைக்காதது குறித்து உரையாடியுள்ளார். சமீரா ரெட்டியின் தந்தை ஏன் தலை முடிக்கு கலர் அடிக்கவில்லை என்று கேட்டுள்ளார். அதற்கு அவர், "மக்கள் என்னை பற்றி என்ன நினைப்பார்கள் என்று எனது தந்தை கவலைப்படுகிறார். அவர் எனக்கு வயதாகிவிட்டது என்று நினைக்கிறார். நான் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை தலை முடிக்கு கலர் அடிக்கிறேன். அதனால் எதையும் மறைக்க முடியாது. தன்னம்பிக்கையுடன் இருக்க விரும்புகிறேன். எனது தந்தை இந்த பதிலை ஏற்றுக்கொண்டார்” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:விஷால் 32 - முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு!